Home கலை உலகம் மீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வருகிறார் சஞ்சய்தத்!

மீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வருகிறார் சஞ்சய்தத்!

723
0
SHARE
Ad

24-sanjay-dutt98-600மும்பை – புனே சிறையில் உள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீண்டும் 30 நாள் பரோலில் வெளியே வருகிறார்.

மும்பை தொடர்க் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராகவும், சட்டவிரோதமாகப் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், உச்சநீதிமன்றத்தில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று புனே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் அடிக்கடி பரோலில் வெளியே வந்து  செல்வது வாடிக்கையாகிவிட்டது.

#TamilSchoolmychoice

2013 – 2014ம் ஆண்டில் மட்டும் அவர் 118 நாட்கள் பரோலில் வெளியே இருந்துள்ளார். இது பயங்கர சர்ச்சையைக் கிளப்பியது.

ஆனாலும் அவர் தனது பரோலை நீட்டிக்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது பரோல் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, அந்தக் கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘தனது மகள் இக்ரா உடல் நலக்குறைவால் அவதிப்படுவதால் அவரைப் பார்க்க 30 நாட்கள் பரோல் வேண்டும்’ எனக் கேட்டுக் கடந்த ஜுன் மாதம் விண்ணப்பித்தார்.

அதற்கு அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இது அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள 4 -ஆவது பரோல் என்பது குறிப்பிடத்தக்கது.