Home இந்தியா குஜராத் வன்முறை : அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

குஜராத் வன்முறை : அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

626
0
SHARE
Ad

Narendra_Modiகுஜராத் – குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் இன மக்கள் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் இன்று வன்முறையில் முடிந்தது.

பேரணி நடத்திய படேல் இன மக்கள் அடுத்ததாகப் பந்த் என அறிவித்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குஜராத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ஆகையால், உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவத்தினர் குஜராத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “வன்முறையால் யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்காது. குஜராத் மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.