சென்னை – ரூ.80 கோடி மதிப்பிலான சாமி சிலைகள் திருட்டு வழக்கில் சினிமா முதலீட்டாளர் உள்பட மேலும் இருவரைச் சிலைத் தடுப்புக் காவல்துறையினர் கைது செய்து 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.மேலும், இயக்குநர் வீ.சேகரின் கடவுச்சீட்டு( பாஸ்போர்ட்) முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலைகள் திருட்டில் ஏற்கனவே சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன், பிரபல திரைப்பட இயக்குநர் வீ.சேகர், பெண் நிருபர் மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களைத் தொடர்ந்து சென்னை காவல்துறை அதிகாரி ரவிச்சந்திரன், சென்னை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் ஜாய்சன் சாந்தகுமார்,மாரி என்ற மாரிசன், கோகுல் ஆகிய நான்கு பேரும் பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைகப்பட்டுள்ளனர்.
இவர்களில், வீ.சேகர், மாலதி ஆகிய இருவரும் ரூ 20 லட்சம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். வீ.சேகர் சென்ன பெருநகர 2–ஆவது நீதிமன்றத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி
நேற்று இந்த வழக்கில் அதிரடி திருப்பமாகத் சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சினிமா முதலீட்டாளர் வெங்கட்ராமன், சிலை திருட்டு பழைய குற்றவாளி ராஜசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் போலீஸ் பிடியில் சிக்கியவர்கள் எண்ணிக்கை 10– ஆக உயர்ந்துள்ளது.