Home நாடு மலாக்கா மாநில துணை சபாநாயகர் டத்தோ இட்ரிஸ் காசிம் காலமானார்

மலாக்கா மாநில துணை சபாநாயகர் டத்தோ இட்ரிஸ் காசிம் காலமானார்

803
0
SHARE
Ad

rsz_lendu-idderisமலாக்கா, மார்ச் 11 – மலாக்கா, லெண்டு மாநில சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான டத்தோ இட்டரிஸ் காசிம் (வயது 66) அவர்கள் நேற்று மாலை 6.50 மணிக்கு புத்ரா மருத்துவமனையில் காலமானார்.

அவர் கடந்த 2011 ஆண்டு முதல் குடல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில்  மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

அவருக்கு டத்தின் ரோஹனி யூனுஸ் என்ற மனைவியும், ஜம்ரான் மற்றும் ஜுல்கர்னைன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

அவரது இறுதிச் சடங்கு இன்று காலை 11 மணியளவில் ஆயர் லிமாவ் இஸ்லாம் மயானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இட்டரிஸின் இறப்பு குறித்து மலாக்கா முதல்வர் டத்தோ ஸ்ரீ முகமது அலி ருஸ்தாம், அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மறைவு மலாக்கா மாநில மக்களுக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.