Home Featured நாடு ஆளில்லா விமானங்கள் மூலம் ரோந்துப் பணி – மலேசியக் காவல்துறை திட்டம்

ஆளில்லா விமானங்கள் மூலம் ரோந்துப் பணி – மலேசியக் காவல்துறை திட்டம்

566
0
SHARE
Ad

Khalid Abu Bakarசுபாங் ஜெயா, ஆகஸ்ட் 14 – நகரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும், தினசரி ரோந்துப் பணிகளை கவனிப்பதற்கும், ஆளில்லா சிறிய விமானங்களைப் பயன்படுத்த மலேசியக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூறியுள்ளார்.

“தற்போது எங்கள் அதிகாரிகள் அந்த சிறிய விமானங்களை இயக்குவதற்கான முறையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். முதலில் மூன்று அல்லது நான்கு விமானங்களைக் கொண்டு சிறிய அளவில் தான் இந்தத் திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். முதலில் கிள்ளான் பள்ளத்தாக்கில், இந்த சிறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த சிறிய ஆளில்லா விமானங்கள் மற்றும் போக்குவரத்து கேமராக்களில், முகம் அடையாளங்காணும் மென்பொருளைப் பொருத்துவதன் மூலம், தேடப்படும் குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் கண்டறியும் திட்டத்தையும் விரைவில் செயல்படுத்தவுள்ளதாக காலிட் குறிப்பிட்டுள்ளார்.