Home உலகம் காற்று மாசுபாட்டால் சீனாவில் நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறக்கின்றனர்!

காற்று மாசுபாட்டால் சீனாவில் நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறக்கின்றனர்!

560
0
SHARE
Ad

chinaவாஷிங்டன், ஆகஸ்ட் 14 – சீனாவில் காற்று மாசுபாட்டால், நாள் ஒன்றுக்கு 4000 பேர் இறப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிய அளவில் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் முன்னோடியாகத் திகழும் சீனாவில், இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், சீனாவில் ஆண்டிற்கு 1.6 மில்லியன் மக்கள், இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டு மரணிக்கின்றனர். இவை அனைத்திற்கும் அடிப்படையாக காற்று மாசுபாடு உள்ளது என்று கண்டறிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆய்வின் மூலம், சீன மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதியில் தான் வசிக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, ராயல் நெதர்லாந்து வானிலையியல் நிறுவனம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதி மாசுபடுவதற்கு சீனா தான் காரணம் என்று கூறியுள்ளது. பசிபிக் பகுதி முழுவதையும் சீனா மாசுபடுத்தி விட்டதால், காற்றில் மிதந்து வரும் மாசு, அமெரிக்காவின் மேற்குப் பகுதியை கெடுக்கிறது என்று தெரிவித்துள்ளது.