கோத்தா கினபாலு, ஆகஸ்ட் 14 – எல்லாம் சரியாக நடந்தால், எதிர்வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குள், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மலையான கோத்தா கினபாலு மீண்டும் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5-ம் தேதி, ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், சேதமடைந்த பாதைகளுக்கு மாற்று வழியாக கிலோமீட்டர் 6.5 மற்றும் கிலோமீட்டர் 6.7-ல் புதிய பாதைகள் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சபா சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
“வரும் டிசம்பர் மாதம் கோத்தா கினபாலு, மலையேற்ற வீரர்களுக்காகத் தயாராக இருக்கும்” என சபா சுற்றுலாத்துறை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ மசிடி மஞ்சுனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.