24 வயதுப் பெண்ணான வீட்டின் உரிமையாளரை, கத்தியைக் கழுத்தில் வைத்து சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடத்திச் சென்றான்.
அப்போது அங்கு காவல்துறையினர் அவனிடமிருந்து அப்பெண்ணை விடுவிக்க இரண்டு மணி நேரமாகப் போராடினர். அதோடு அவனிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.
பலமுறை அவன் அப்பெண்ணின் கழுத்தை அறுக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான்.
இந்நிலையில், சரியான சந்தர்ப்பத்தில் காவல்துறை அவனைத் தடுத்து அப்பெண்ணை அவனிடமிருந்து மீட்டதாக கோத்தா கினபாலு நகர துணைக் காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் ஜார்ஜ் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.