கோலாலம்பூர் – புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது, முக்தி அடைந்தது ஆகிய நிகழ்வுகளைக் கொண்டாடும் ஒரு நாளாக, ஒவ்வொரு ஆண்டும் விசாக தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
புத்த பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் இத்திருநாள், பௌர்ணமி அன்று புத்த மதத்தினராலும், இந்துக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன் படி, நேற்று புதன்கிழமை மலேசியா முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் புத்த ஆலயங்களில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டு புத்த வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், ரவாங் அருகே செரண்டா பகுதியில் அமைந்திருக்கும் புத்த ஆலயத்தில், நடைபெற்ற வழிபாட்டுப் புகைப்படங்களை இங்கே காணலாம்.
செய்தி/படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்