Home நாடு எம்எச்2614 விமானத்தில் அமிலக் கசிவு: காரணம் 40 கிலோ பேட்டரி!

எம்எச்2614 விமானத்தில் அமிலக் கசிவு: காரணம் 40 கிலோ பேட்டரி!

1311
0
SHARE
Ad

AP I MYS MALAYSIA AIRLINESகோத்தா கினபாலு – நேற்று புதன்கிழமை கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் ஏற்பட்ட அமிலக் கசிவிற்குக் காரணம் அவ்விமானத்தின் சரக்குப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த 40 கிலோ சிபியு பேட்டரிக்கள் (மின்கலம்) தான் காரணம் என கோத்தா கினபாலு விமான நிலைய மூத்த நிர்வாகி சுனிஃப் நைமான் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஊடகங்களிடம் சுனிஃப் வெளியிட்டிருக்கும் தகவலில், “மலேசியா விமான எம்எச்2614-ல் ஏற்பட்ட அமிலக் கசிவு குறித்து மாலை 5.35 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவ்விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டு பே 5பி-ல் நிறுத்தப்பட்டு, சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டது. அதன் பின்னர் அமிலப் பராமரிப்பு நிபுணர்கள் வந்து சோதனையிட்டதில், அவ்விமானத்தின் சரக்குப் பகுதியில் இருந்த 40 கிலோ மின்கலன்களில் இருந்து அமிலம் கசிந்திருப்பது கண்டறியப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

அவ்விமானம் கோலாலம்பூரில் இருந்து கோத்தா கினபாலுவிற்கு வந்தது என்றும் சுனிஃப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice