Home நாடு சமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி!

சமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி!

1736
0
SHARE
Ad

school-islam-fire-14092017கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட் பகுதியில் அமைந்திருக்கும் சமயப் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர்கள், ஆசியர்கள் உட்பட குறைந்தது 23 பேர் பலியாகிவிட்டதாக, ‘தி ஸ்டார்’ இணையதளம் கூறுகின்றது.

காலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயைப் போராடி அணைத்து வருகின்றனர்.

“எங்களுக்குக் கிடைத்தத் தகவலின் படி இந்த நிமிடம் வரை 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீயில் கருகி பலியாகியிருக்கின்றனர். எங்களுடைய மீட்புக் குழுவினர் இன்னும் அங்கு தான் இருக்கின்றனர்” என்று தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice