கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – மலேசியர்களுக்கு, இந்தியாவிற்கு செல்லத் தேவையான சுற்றுலா விசாவை இணையம் மூலமாகப் பெறும் வசதி (e-Tourist) இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகின்றது.
மலேசியா உட்பட இன்னும் 36 நாடுகளுக்கும் மேல் இந்த வசதியை, இன்று ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்தவுள்ளதாக இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் அயர்லாந்து, தாய்வான் மற்றும் இங்கிலாந்தும் அடக்கம்.
இந்த ஈ-சுற்றுலா விசா இணையதளத்தின் தகவல் படி, இந்த சுற்றுலா விசா இந்தியாவில் இறங்கியதில் இருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாவைப் பெற 60 அமெரிக்க டாலர் (மலேசிய மதிப்பில் 244.72 ரிங்கிட்) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேல் விவரங்களுக்கு indianvisaonline.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.