கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதற்கு ‘அதிகமான அரசியல் ஆரூடங்கள்’ தான் காரணம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், நஜிப் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சீன அரசு தனது யுவானின் மதிப்பைக் குறைத்ததால், ஆசிய நாடுகளின் பண மதிப்பு குறைந்துள்ளது என்றும், அதன் காரணமாக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.