சென்னை,ஆகஸ்ட்15- இந்தியாவின் 69-ஆவது சுதந்திர தின நாளான இன்று காலை 8.50 மணியளவில் சென்னை தலைமைச் செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
ஜெயலலிதாவின் சுதந்திர தின உரை மிகவும் சுருக்கமாக இருந்தது.10 நிமிடங்கள் மட்டுமே முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்திற்காகத் தமிழக அரசு செயல்படுகிறது எனத் தநது உரையில் குறிப்பிட்ட அவர், இனி தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சுதந்திர தின உரைக்குப் பிறகு, அப்துல்கலாம் விருது, வீரதீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்தச் சுதந்திர தினத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அப்துல் கலாம் விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் வளர்மதி பெற்றார்.