Home உலகம் 82 வயது தொல்பொருள் ஆய்வாளர் கொடூரக் கொலை – ஐஎஸ்ஐஎஸ் அக்கிரமம்!

82 வயது தொல்பொருள் ஆய்வாளர் கொடூரக் கொலை – ஐஎஸ்ஐஎஸ் அக்கிரமம்!

557
0
SHARE
Ad

imageபால்ம்யிரா, ஆகஸ்ட் 20 – ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் மனித இனத்தவர்களே அல்ல, காட்டுமிராண்டிகள் என்பதை தங்கள் கொலைபாதக செயல்கள் மூலம் தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர். ஆண்கள்-பெண்கள், வயது வித்தியாசம் என்று எதுவும் பார்க்காமல், தங்கள் திட்டம் நிறைவேறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நோக்கத்துடன் மீண்டும் ஒரு கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இம்முறை ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரின் வெறிக்கு பலியாகி இருப்பவர் 82 வயது காலித் ஆசாத் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.

சிரியாவின் புராதன நகரங்களில் விலைமதிக்க முடியாத பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என கேட்டு, ஐஎஸ் இயக்கத்தினர் தொடர்ந்து ஆசாத்தை துன்புறுத்தி வந்தனர். எனினும், ஆசாத் கடைசி வரை புராதன நகரங்களின் வளங்கள் பற்றி எவ்வித தகவல்களையும் தெரிவிக்காததால் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை படுகொலை செய்துள்ளனர்.

சிரியாவின் பழமை வாய்ந்த நகரமான பால்ம்யிராவில், நேற்று அசாத்தின் தலை(படம்), பொது இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், ஆசாத்தை படுகொலை செய்ததை அவர்கள் பெருமையுடன் தங்கள் வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.