Home Featured உலகம் பாங்காக் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் மாதிரி படம் வெளியீடு

பாங்காக் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் மாதிரி படம் வெளியீடு

539
0
SHARE
Ad

bombersketchபாங்காக், ஆகஸ்ட் 20 – பாங்காக் குண்டுவெடிப்புக்கு காரணமான சதிகாரன் என நம்பப்படும் சந்தேக நபரின் மாதிரி படத்தை தாய்லாந்து காவல்துறை வெளியிட்டுள்ளது.

இருபது பேரை பலிகொண்ட அந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், சந்தேக நபரின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது மட்டுமே இந்த வழக்கின் ஒரே முன்னேற்றமாக கருதப்படுகிறது.

தேடப்படும் இந்நபர் தாய்லாந்தைச் சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டுக்காரரா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலும் குண்டுவெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை என தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“பெரிய குழுவே இதன் பின்னணியில் உள்ளது. தேடப்படும் நபரும் அதில் ஒருவர். அவருக்கு சிலர் உதவி செய்வதாக நம்புகிறோம்,” என தாய்லாந்து தேசிய காவல்துறை தலைவர் சோம்யோட் பூம்பான்மௌங் கூறியுள்ளார்.

எனினும் மேற்கொண்டு எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேக நபரின் படம் வெளியிடப்பட்டுள்ளது.