Home Featured வணிகம் எச்1என்1,எச்எப்எம்டி கிருமிகளைத் தடுக்க புதிய பெயிண்ட் – நிப்பான் மலேசியா அறிமுகம்

எச்1என்1,எச்எப்எம்டி கிருமிகளைத் தடுக்க புதிய பெயிண்ட் – நிப்பான் மலேசியா அறிமுகம்

686
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – எச்எப்எம்டி என அழைக்கப்படும் கை, பாதம், வாய் நோய் கிருமி மற்றும் எச்1என்1 கிரிமி ஆகியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பிரபல நிப்பான் பெயிண்ட் மலேசியா நிறுவனம், புதிய பெயிண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பெயிண்ட் அடுத்த மாதம் முதல் சந்தையில் ‘நிப்பான் வைரஸ் கார்ட்’ என்ற பெயரில் கிடைக்கும்.

a0cb6d9083d1d468b3c3724b1194a76f

#TamilSchoolmychoice

‘சில்வர் அயான் தொழில்நுட்பம் – Silver Ion Technology’ மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெயிண்ட்டில், கிருமிகளுக்கு எதிரான தன்மை கொண்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பெயிண்ட் பூசப்பட்டுள்ள சுவற்றில் பரவும் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றின் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கின்றது.

இந்தப் புதிய பெயிண்ட்டின் அறிமுக விழா கடந்த புதன்கிழமை புக்கிட் ஜெலுதோங்கில் நடைபெற்றது. அதில் நிப்பான் பெயிண்ட் மலேசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யா செங் ஹெங் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு புதிய பெயிண்ட் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.