Home வணிகம்/தொழில் நுட்பம் எம்எச்இஏ ஏற்பாட்டில் முதல் முறையாக மின்சாரப் பொருட்கள் கண்காட்சி!

எம்எச்இஏ ஏற்பாட்டில் முதல் முறையாக மின்சாரப் பொருட்கள் கண்காட்சி!

1053
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எம்எச்இஏ எனும் மலேசிய தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கம் முதல் முறையாக மின்சாரப் பொருட்கள் கண்காட்சியை நடத்தியது.

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, தலைநகர் விஇ தங்கும்விடுதியில் இக்கண்காட்சி நடைபெற்றது.

சுமார் 50-க்கும் மேற்பட்ட மின்சாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றதாக மலேசியத் தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் ஏயு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் 200 -க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

பொறியிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஓரிட மையமாக அமைக்கப்பட்ட இச்சங்கம் , பல சமுக கடப்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் பொறியியலாளர் துறையில் காணப்படும் தற்போதைய நவீன மாற்றங்கள், வியூகங்கள் குறித்த விளங்கங்கள் குறித்தும் அதன உறுப்பினர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மலேசிய தங்குவிடுதி பொறியிலாளர்கள் சங்கம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.