Home தேர்தல்-14 கோலாலம்பூரில் 13 கி.மீ இடைவெளியில் இரு பேரணிகள்: நஜிப், மகாதீர் பங்கேற்கிறார்கள்!

கோலாலம்பூரில் 13 கி.மீ இடைவெளியில் இரு பேரணிகள்: நஜிப், மகாதீர் பங்கேற்கிறார்கள்!

1071
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில், கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இரு பேரணிகளில், தற்போதைய அரசியல் சூழலில் எதிர் எதிர் துருவங்களாய் இருக்கும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த இரண்டு பேரணிகளுமே, சுமார் 15 நிமிட பயண இடைவெளியில் அருகருகே அமைந்திருக்கின்றன.

பிபிஆர் கொமுனிட்டி கோம்பாக் செத்தியாவில் நடைபெறும் பேரணியில் வாங்சா மாஜு தேசிய முன்னணி வேட்பாளர் இயோ தியோங் லூக்கிற்கு ஆதரவாக நஜிப் கலந்து கொள்கிறார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், அங்கிருந்து 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பிளாட் டேசா பாண்டானில் பெர்சாத்து சார்பில் நடைபெறும் பேரணியில் மகாதீரும், டான்ஸ்ரீ மொகிதின் யாசினும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.