Home Featured நாடு மஇகா வேட்புமனுத் தாக்கல்: திரண்டு வந்த பழனி ஆதரவாளர்களால் திடீர் பதற்றம்!

மஇகா வேட்புமனுத் தாக்கல்: திரண்டு வந்த பழனி ஆதரவாளர்களால் திடீர் பதற்றம்!

542
0
SHARE
Ad

IMAG3253கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – மஇகா தலைமையகத்தில் தற்போது தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகின்றது. இன்று 4.30 மணி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் 6.30 மணி நடைபெறவுள்ளது.

IMAG3238

இந்நிலையில், டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தரப்பில் இருந்து டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் மற்றும் ஏ.கே. ராமலிங்கம் தலைமையில் சிலர் மஇகா தலைமையகத்தின் முன்பு கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு திடீரென பதட்டமான சூழ்நிலை நிலவியது.

#TamilSchoolmychoice

அங்கு பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு, அங்கிருந்து அவர்களை விலகிச் செல்லும்படி உத்தரவிட்டனர்.

IMAG3237

இதனிடையே, அக்கூட்டத்தில் இருந்து சிலர் கற்களை வீசியதால், அதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து கலைந்து செல்லும் படி அவர்களை காவல்துறையினர் உத்தரவிட்டதால், ஒரு சில நிமிடங்களில் அந்தக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

IMAG3236

தற்போது, அங்கு வேட்புமனுத் தாக்கல் சுமூகமான முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.