லண்டன்,ஆகஸ்ட் 21- பெண்களை ஆபாசமாகக் கிட்டத்தட்ட 9 ஆயிரம் படங்கள் எடுத்ததாக இந்தியர் ஒருவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவரைக் குற்றவாளியென அங்குள்ள நீதிமன்றம் அறிவித்துச் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
38 வயதான சலீம் பட்டேல் இந்தியாவைச் சேர்ந்தவராவார். அவர் லண்டனில் உள்ள பாரகன் தெருவில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அவர் நேற்று முன்தினம் லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் மறைந்திருந்து, ஒரு பெண் தனது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக் கைபேசியில் படம் பிடித்துள்ளார்.
இதைப்பார்த்த ஒருவர் அப்பகுதியில் இருந்த காவல்துறையினரிடம் இதுபற்றிப் புகார் தெரிவித்தார். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து அவரைப் பிடித்து அவரது கைபேசி மற்றும் கணினியைக் கைப்பற்றி சோதனை செய்தபோது அதிர்ந்து போனார்கள்.
ஒரு செக்ஸ் சைக்கோ போல கணினி மற்றும் கைபேசி முழுக்கப் பெண்களின் விதவிதமான ஆபாசப் படங்கள். அத்தனையும் இவரே எடுத்தது. மொத்தம் 9 ஆயிரம் படங்கள்!
சுரங்க ரயில் நிலையங்களில், பேருந்தில், பூங்காவில், கடைவீதிகளில், தியேட்டரில், வணிக வளாகத்தில் என வளைத்து வளைத்து எடுத்திருக்கிறார்..பெண்கள் எஸ்கலேட்டரில் போகும் போது கீழே இருந்து எடுத்தது, மேலே இருந்து எடுத்தது, பெண்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதைக் கூட படம் பிடித்து வைத்திருக்கிறார்.
2013–ஆம் ஆண்டில் இருந்து இதுபோல படங்களை எடுத்துக் குவித்திருக்கிறார்.
இக்குற்றத்திற்காக அவர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்த ஹம்மர்ஸ்மித் நீதிமன்றம் சலீம் பட்டேல் குற்றவாளி என்று அறிவித்துள்ளது.
தண்டனை விவரங்கள் செப்டம்பர் 9–ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி சூசன் கூப்பர் தெரிவித்துள்ளார்