Home உலகம் சுலோவாகியாவில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதல்: 7 பேர் பலி!

சுலோவாகியாவில் நடுவானில் இரண்டு விமானங்கள் மோதல்: 7 பேர் பலி!

593
0
SHARE
Ad

Slovakia_2518732fபிராட்டிஸ்லாவா, ஆகஸ்ட் 21- சுலோவாக்கியா நாட்டில் 40 பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற இரண்டு விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர் .

தரையிலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில், மேற்கு சுலோவாகியாவின் கார்வெனே காமென் கிராமத்தில் நேற்று காலை 7.30 மணியளவில் இந்தப் பயங்கர விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த தருணத்தில் அதில் பயணித்த சில வீரர்கள் பாராசூட் உதவியுடன் கீழே குதித்துத் தப்பினர்.

#TamilSchoolmychoice

15 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்து சென்று வீரர்களை தேடி வருகின்றனர்.