Home Featured உலகம் யூரோ : ஜெர்மனி, பெல்ஜியம் கால் இறுதிக்குத் தகுதி!

யூரோ : ஜெர்மனி, பெல்ஜியம் கால் இறுதிக்குத் தகுதி!

871
0
SHARE
Ad

euro-germany-slovakia-score

euro-hungary-belgium-score

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இரண்டாவது சுற்றில் நேற்றைய முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அயர்லாந்தை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனியும், சுலோவாக்கியாவும் களமிறங்கின.

#TamilSchoolmychoice

இதில் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுலோவாக்கியாவைத் தோற்கடித்து, தனது ஆட்டத் திறமையை ஜெர்மனி மீண்டும் நிரூபித்தது. இதன்வழி கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறுகின்றது ஜெர்மனி.

யூரோ, உலகக் கிண்ணம் என உலக அளவிலான போட்டிகள் என்று வரும்போது, குறைந்த பட்சம் கால் இறுதி வரை வந்து விடும் ஒரு நிலையான – தொடர்ச்சியான – வெற்றிக் குழுவை பல ஆண்டுகளாக ஜெர்மனி தக்க வைத்துக் கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

ஹங்கேரி – பெல்ஜியம்

இன்று திங்கட்கிழமை அதிகாலை (மலேசிய நேரப்படி) நடந்த மற்றொரு ஆட்டத்தில் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம், ஹங்கேரியைத் தோற்கடித்துள்ளது.

இதன் வழி பெல்ஜியம் குழுவும் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

euro-germany-slovakia-players

பந்துக்குப் போராட்டம் நடத்தும் ஜெர்மனி, சுலோவாக்கியா விளையாட்டாளர்கள்…