Home Featured நாடு டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

724
0
SHARE
Ad

IMAG3274கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இன்று மஇகா தலைமையகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவடைந்தபோது, வேறு யாரும் போட்டியிட வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என்ற நிலையில், சுகாதார அமைச்சரும், கட்சியின் நடப்பு இடைக்கால தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் ஏகமனதாக மஇகாவின் 9வது தேசியத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஇகா தேசியத் தலைவர் தேர்தல் குழுவின் தலைவரும் இன்றைய வேட்புமனுத் தாக்கலுக்கான தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றிய டத்தோ பி.சகாதேவன், டாக்டர் சுப்ரா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.