Home இந்தியா ரணில் விக்கிரமசிங்கேவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து!

ரணில் விக்கிரமசிங்கேவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து!

690
0
SHARE
Ad

Modi-ranilபுதுடெல்லி, ஆகஸ்ட் 21- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே  தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது, ரணிலின் தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் நான்காவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள  அவருக்கு இந்தியப் பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இலங்கைப் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றதற்கும், அவரது பணி சிறப்பதற்கும் எனது வாழ்த்துக்கள்” எனத் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.