Home Featured கலையுலகம் மலேசியர்களுக்கு அஸ்ட்ரோ நன்றி – 10 நாட்களுக்கு 150-க்கு மேற்பட்ட அலைவரிசைகள் இலவசம்!

மலேசியர்களுக்கு அஸ்ட்ரோ நன்றி – 10 நாட்களுக்கு 150-க்கு மேற்பட்ட அலைவரிசைகள் இலவசம்!

685
0
SHARE
Ad

Astroகோலாலம்பூர் – அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தரமான தகவல், பொழுதுப் போக்கு மற்றும் விளையாட்டு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஆகஸ்டு 22-ஆம் தேதி தொடக்கம் ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 150-க்கு மேற்பட்ட அலைவரிசைகளில் இலவசமாகக் கண்டு மகிழலாம். இவை எச்.டி அலைவரிசைகளும் அடக்கியுள்ளது. தொலைக்காட்சியில் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோ ஓன் தோ கோ-வை அணுகியும் இந்நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

இந்த 10 நாட்களில் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் வெளிவந்த சிறந்த நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வாய்ப்பைப் பெறலாம். அதை வேளையில் சமீப காலத்தில் வெளிவந்து வெற்றி நடைபோடும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள், தேர்தெடுக்கப்பட்ட இந்தி திரைப்படங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ வழங்குகின்றது.

6–வது புத்ரா பிராண்ட் விருது (Putra Brand Awards) அஸ்ட்ரோ சிறந்த பொழுது போக்கு மற்றும் ஊடக முத்திரை எனும் விருதுக்குத் தேர்தெடுக்கப்பட்டதற்காக வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இலவச அலைவரிசைகள் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, ERA fm மற்றும் hitz fm வானொலி அதைப் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை முறையே வென்றுள்ளது.

#TamilSchoolmychoice

புத்ரா பிராண்ட் விருது (Putra Brand Awards) மலேசியாவில் அங்கீகாரம் பெற்ற விளம்பாரம் சங்கம் (Association of Accredited Advertising Agents Malaysia) மற்றும் மலேசியாவின் மிகவும் மதிப்புள்ள பிராண்ட்ஸ் (Malaysia’s Most Valuable Brands) இணைந்து வழங்கும் பிரபலமான விருது ஆகும். தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் விருதின் வெற்றியாளர்கள் 6,000 மலேசிய பயனீட்டாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பு : ஆகஸ்டு 22- 31-ஆம் தேதி வரை 150-க்கு மேற்பட்ட இலவச அலைவரிசைகளில் Astro First &  Astro Best மற்றும் la carte விளையாட்டு அலைவரிசைகள் (Golf HD, Astro Cricket, WWE Network மற்றும் Setanta Sports HD) உள்ளடங்காது.