Home உலகம் காந்தி சிலையைக் காலணியால் அடித்த கனடா வாழ் ‘இந்தியர்கள்’! (காணொளியுடன்)

காந்தி சிலையைக் காலணியால் அடித்த கனடா வாழ் ‘இந்தியர்கள்’! (காணொளியுடன்)

878
0
SHARE
Ad

Mahatma-Gandhiமானிட்டோபா, ஆகஸ்ட் 22 – தேசப் பிதாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் அவமானப்படுத்தும் விதத்தில் இரு கனடா வாழ் இந்தியர்கள் நடந்து கொண்டுள்ளனர்.

கனடாவின் மானிட்டோபா மாகாணத்தில் உள்ள வினிப்பெக் நகரில் வைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலையை, அந்த இரு இந்தியர்களும், தாங்கள் அணிந்து இருந்த காலணியைக் கொண்டு அடித்துள்ளனர். இவர்களின் செயலை மற்றொருவர் வெட்கமில்லாமல் காணொளியாகவும் படம் பிடித்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தில் நடந்துள்ளது. தாங்கள் ஏதோ வரலாற்று சாகசத்தை செய்தது போல் அந்த காணொளியை நட்பு ஊடகங்களில் வெளியிட்டு அகமகிழ்ந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த காணொளியில் இருப்பவர்களில் ஒருவர் சீக்கிய இனத்தவர் என்றும், மற்றொருவர் பஞ்சாபி என்றும் தெரியவந்துள்ளது. இந்த காணொளியை படம் பிடித்தவர் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

காந்தியின் தியாகத்தை உணர்ந்து அவருக்கு சிலை வைத்து கனடா பெருமை தேடிக் கொண்டது என்றால், அவரின் சிலையை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இவர்கள், தாங்கள் மிக இழிவானவர்கள் என்று நிரூபித்துள்ளனர். இவர்களின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களின் தரங்கெட்ட இந்த செயலைக் கீழே காண்க:-