Home Featured நாடு 1எம்டிபி – 42 மில்லியன் ரிங்கிட் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவில்லை: அப்துல் ரஹ்மான்

1எம்டிபி – 42 மில்லியன் ரிங்கிட் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவில்லை: அப்துல் ரஹ்மான்

497
0
SHARE
Ad

1MDBசுபாங்ஜெயா – தனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் தொகை குறித்து பிரதமர் நஜிப் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.

1எம்டிபியின் துணை நிறுவனங்களில் ஒன்றான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு 42 மில்லியன் ரிங்கிட் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தப் புகார் குறித்து அம்னோ உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதா? என்று அப்துல் ரஹ்மானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த அவர், “இல்லை… அவர் (பிரதமர்) இதுவரை விளக்கமளிக்கவில்லை” என்றார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விசாரணைக்கு உத்தரவிட்டதும் பிரதமர்தான் என்றார்.

“இந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பிரதமரும் விரும்புகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார் அப்துல் ரஹ்மான்.