Home Featured நாடு அட்டர்னி ஜெனரல் அலுவலக பெண் அதிகாரி நாடு கடத்தப்பட உத்தரவு

அட்டர்னி ஜெனரல் அலுவலக பெண் அதிகாரி நாடு கடத்தப்பட உத்தரவு

934
0
SHARE
Ad

Jessica-Gurmeet-Kaurபுத்ரா ஜெயா – 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணையில் ஈடுபட்ட அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) அலுவலக பெண் அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெசிகா குர்மீட் கவுர் (படம்) என்ற அப்பெண் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மலேசியாவில் நிரந்தர குடியிருப்பு தகுதி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவரும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசகரான டான்ஸ்ரீ ராஷ்பால் சிங்கும் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கைதாகினர்.

#TamilSchoolmychoice

1எம்டிபி விசாரணை குறித்த தகவல்கள் வெளியே கசிந்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெசிகா பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது நிரந்தர குடியிருப்பு தகுதி ரத்து செய்யப்பட்டு, அவரை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான உத்தரவை அவரிடம் அளிக்க குடிநுழைவு துறை அதிகாரிகள் பங்சாரில் உள்ள அவரது வீட்டிற்கு வியாழக்கிழமை சென்றனர். எனினும் ஜெசிகா அச்சமயம் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே அவரது பிணை உத்தரவும் கடந்த வாரமே ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவுகளை எதிர்த்து ஜெசிகா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும் அதன் தொடர்பில், சத்தியப் பிரமாணம் ஒன்றைத் தாக்கல் செய்யப் போவதாகவும், அந்த சத்தியப் பிரமாணத்தில் அதிர்ச்சி தரும் அதிரடியான சில தகவல்களை வெளியிடப்போவதாக ஜெசிகா அறிவித்துள்ளதாகவும் இணைய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.