ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் கையகப்படுத்திய ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்துத் தனி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர்.
அப்படி ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றிய போது நூற்றுக்கும் மேற்பட்ட யாஷ்தி இனப் பெண்களைக் கடத்திச் சென்று, செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பெண்களைச் செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்தியதன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள் 16 பேருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததுள்ளது.
தற்போது சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், எய்ட்சால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் மனித வெடிகுண்டாக மாற்ற ஐஎஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வெளிநாட்டு நோயாளிகளின் உடலில் ஹெச்ஐவி நோயாளியின் ரத்தத்தை ஊசியின் மூலம் செலுத்தி, அவர்களையும் தற்கொலைப் படைகளாக மாற்ற பயிற்சி அளிக்கப்படுவதாகத் ‘தி டெய்லி மெயில்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.