Home இந்தியா மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!

மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!

544
0
SHARE
Ad

obama-modi_2376096fவாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகப் பேசும் அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் விருப்பத்திற்கிணங்க, இந்த ஹாட் லைன் வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தெற்காசியப் பிரிவு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு கொள்கைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருவதால், இந்தியப் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையே ‘ஹாட்லைன்’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மிக மிக நெருக்கமான இருநாட்டுத் தலைவர்களிடையேயான பாதுகாப்பான இந்த இணைப்பு, நெருக்கடியான சூழல்களில் கருத்துக்களைப் பரிமாறவும், பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்காகவும் பயன்படுத்தக்கூடியதாகும்.

ரஷ்யா, பிரிட்டன், சீனாவுக்கு அடுத்ததாக இந்தியப் பிரதமருடன்தான் அமெரிக்கா இத்தகைய hotline தொலைபேசி இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.