Home இந்தியா சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின் தெண்டுல்கர் சந்திப்பு

697
0
SHARE
Ad

22-1440191536-sachinnewwwwwwwசென்னை- இந்தியக் கிரிக்கெட் நட்சத்திர வீரர்  சச்சின் தெண்டுல்கர், சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

சென்னையில் MRF foundation  சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சச்சின் நேற்று சென்னைக்கு வந்திருந்தார். எம்ஆர்எஃப் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களைச் சந்தித்து, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள பல்வேறு நுணுக்கங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதன் பின்னர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று சச்சின் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இந்தச் சந்திப்பின் போது ஏ.ஆர். ரகுமான்,சச்சினுக்காகச் சில சந்தங்களை( டியூன்களை) இசையமைத்துக் காண்பித்தார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் விதத்தைச் சச்சின் தெண்டுல்கர் நேரில் கண்டு ரசித்தார்.

இந்தச் சந்திப்பு நீண்ட நேரம் நீடித்தது.

ஏ.ஆர்.ரகுமானுடனான இந்தச் சந்திப்பு குறித்துச் சச்சின் தனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியுள்ளார். தான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகர் என்றும், மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்க வந்தாகவும் தெரிவித்தார்.