Home கலை உலகம் நடிகர்கள் முறையாக தேர்ச்சிப் பெற்று பாட வேண்டும்!- ஏ.ஆர் ரஹ்மான்

நடிகர்கள் முறையாக தேர்ச்சிப் பெற்று பாட வேண்டும்!- ஏ.ஆர் ரஹ்மான்

1740
0
SHARE
Ad

சென்னை: தற்காலச் சூழலில் தமிழ் திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் அடிக்கடி பாடி வருகின்றனர் . முன்பெல்லாம், நன்கு தேர்ச்சிப் பெற்ற பாடகர்களை இசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பாட வைத்து வந்தனர்.  ஆயினும், தற்போது, நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அவர்களே பாடல் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “நடிகர், நடிகைகள் பாடுவது நல்லதொரு விசயம் தான், ஆனால் அதற்காக அவர்கள் சிறிது பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

#TamilSchoolmychoice

தி வாய்ஸ்’ எனும் இசைத் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் நடுவராக பங்கேற்க உள்ள வேளையில்,  இதற்கான விளம்பரப் படப்பிடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வாறு குறிப்பிட்டார்.

நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம் என்றும், இதற்காக அவர்கள் போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.