புக்கிட் மெர்தாஜாம்: பினாங்கு பாலத்தின் 4-வது கிலோமீட்டரில் நடந்த சாலை விபத்தில், எஸ்யூவி ரக வாகனத்தை மோதியதாகக் கூறப்படும் டொயோட்டா வியோஸ் ரக காரின் ஓட்டுனர் இன்று (புதன்கிழமை) காவல் துறையில் சரணடைந்தார்.
இவ்விபத்தில், எஸ்யூவி ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து முழ்கியது.
21 வயது நிரம்பிய அந்த ஆடவன் இன்று அதிகாலை 2 மணியளவில் சரணடைந்ததாக செபெராங் பெராய் மாவட்ட காவல் துறைத் தலைவர் நிக் ரோஸ் அஷான் நிக் அப்துல் ஹாமிட் கூறினார். பின்பு, அந்நபரை காவல் அதிகாரிகள் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்ததாக அவர் கூறினார்.
இந்த விபத்து குறித்து இதுவரையிலும் 15 வாக்குமூலங்களைக் காவல் துறையினர் பெற்றுள்ளதாக நிக் கூறினார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.
இதற்கிடையே, டொயோட்டா வியோஸ் ஓட்டுனர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தி இருந்தனர்.