கொழும்பு – இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் நேற்று இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழா, தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.
விழா தொடங்கியதும், விருந்தினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு ரணில் விக்ரமசிங்கே நடந்து வந்தார். அப்போது அனைவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ரணில், ராஜபக்சே பகுதியை நோக்கி வந்தபோது, ராஜபக்சே புன்னகையுடன் கைகுலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சேவை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றார். அடுத்த சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அவருடன் கை குலுக்கினார்.
இந்த காணொளி தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த காணொளியை பார்க்கையில், ரணிலின் இந்த செயல் வேண்டுமென்றே செய்தது போன்று இருக்கிறது.
விருந்தினர்கள் முன்னிலையில் ரணில் இப்படி நடந்து கொண்டது, ராஜபக்சேவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே, ரணிலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதனை மனதில் வைத்துக் கொண்டு தான், ரணில் தற்போது ராஜபக்சேவிற்கு பதிலடி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காணொளியைக் கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=_1xMDXQS_8w