Home Featured நாடு “நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை” – ஜோகூர் சுல்தான் புதல்வர் அறிவிப்பு

“நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை” – ஜோகூர் சுல்தான் புதல்வர் அறிவிப்பு

669
0
SHARE
Ad

Tunku Ismail Tunku Ibrahimஜோகூர்பாரு – நடந்து வரும் அரசியல் சர்ச்சைகளில் துணிந்து குரல் கொடுத்து வரும் ஜோகூர் சுல்தானின் புதல்வரும், ஜோகூர் மாநிலத்தின் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் (படம்), “நாங்கள் அரசியல் சார்பற்றவர்கள். மக்களுக்கு கௌரவத்துடனும், வெளிப்படையான தன்மையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றும் உண்மையான தலைவர்களை மட்டுமே நான் ஆதரிக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

நேற்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி, அம்னோ மட்டுமே மலாய்க்காரர்களை இணைக்கும் என ஜோகூர் சுல்தான் நம்புவதாகக் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இளவரசர் துங்கு இஸ்மாயிலில் பதில் அமைந்திருக்கின்றது.

“நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை” என்று கூறியுள்ள துங்கு இஸ்மாயில் மாநில சுல்தானான தனது தந்தையாரை தங்களின் தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் சவுத்தர்ன் டைகர்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் (Johor Southern Tigers Facebook page) துங்கு இஸ்மாயில் இவ்வாறு எழுதியுள்ளார்.

“அண்மையக் காலமாக, பலர் எனது தந்தையான ஜோகூர் சுல்தானுடன் நெருக்கம் பாராட்ட முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு யூகங்களும், ஆரூடங்களும், எழுந்துள்ளன. நான்தான் இந்த மாநிலத்தின் அடுத்த சுல்தானாகப் போகும் இளவரசர் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். எந்த ஒரு விஷயமும் சுல்தானின் செவிகளுக்குச் செல்வதற்கு முன்னால் எனக்குத் தெரியாமல் செல்ல முடியாது. எனது, விசுவாசம் எனது தந்தையான சுல்தானுக்கு மட்டுமே உரியதாகும் என்பதோடு, எனது மாநிலத்தின் ஆட்சியுடமைக்கும், எனது மக்களின் நலன்களுக்கும் மட்டுமே நான்முக்கியத்துவம் வழங்குவேன்” என்றும் துங்கு இஸ்மாயில் தனது பதிவில் கூறியுள்ளார்.