சிரியா-சிரியாவின் பால்மைரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரில் இருந்த புகழ்பெற்ற பாரம்பரியச் சின்னமான பால்ஷாமின் கோவிலை ஐஎஸ் தீவிரவாதிகள் வெடி வைத்துத் தகர்த்துள்ளனர்.
சிரியா படைக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த போரில் சிரியாவின் பால்மைரா நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
அந்நகரில் யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னமான பால்ஷாமின் கோவில் உள்ளது.
அங்கு 50 ஆண்டுகளாகத் தொல்பொருட்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த 82 வயதான ஆசாத் என்னும் அறிஞரைச் சிறைப்பிடித்த தீவிரவாதிகள் அவரை ஒருவாரத்திற்கு முன்தலையைத் துண்டித்துக் கொலை செய்து பொது இடத்தில் தலையைத் தொங்கவிட்டனர்.
அதையடுத்து நேற்று அந்நகரில் அமைந்திருந்த மிகப் பழமையான பண்பாட்டுச் சின்னமான பால்ஷாமின் கோவிலை வெடி வைத்துத் தகர்த்துள்ளனர்.