Home உலகம் வீட்டுக் காவலில் இருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு!

வீட்டுக் காவலில் இருந்த மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு!

628
0
SHARE
Ad

Mohamed Nasheedமாலே – மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின், 8 வார வீட்டுக் காவல் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்த அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை காரணமாக, 13 வருட சிறை தண்டனை கடந்த மாதம் வீட்டுக் காவலாக குறைக்கப்பட்டது. 8 வார காலக் கெடுவினை, அரசு நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு அரசு மறுத்துவிட்டதால் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முகமது நஷீத், தனது ஆட்சி காலத்தில் அந்நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை கைது செய்ய உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, முகமது நஷீத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது.

2013-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நஷீத்தின் வழக்கை கையில் எடுத்த புதிய அரசு, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், நஷீத்திற்கு 13 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னாள் அதிபர் என்ற கருணையின் அடிப்படையில், நஷீத்திற்கு வீட்டுக் காவல் நிரந்தரமாக்கப்படும் என அவரது கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.