Home கலை உலகம் விரைவில் மெளலி இயக்கத்தில் கமல் நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம்!

விரைவில் மெளலி இயக்கத்தில் கமல் நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம்!

781
0
SHARE
Ad

kamalmouli_2520015fசென்னை- தற்போது ‘நாதஸ்வரம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் மெளலி, அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை வைத்துத் தமிழில் ஒரு படம் இயக்கவிருக்கிறார்.

இவர் தமிழிலும் தெலுங்குலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய தனித்துவமான நகைச்சுவை இயக்குநர் ஆவார். இவர் ஏற்கனவே 2002-ல் கமலை வைத்து ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தை இயக்கியவர்.

13 வருடங்கள் கழித்து மீண்டும் உலகநாயகனை இயக்கவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அண்மையில் இவர் கமலைச் சந்தித்து, முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை கமலுக்கு மிகவும் பிடித்துப் போய், அதைப் படமாக்கலாம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

தூங்காவனம் படத்தின் பின்னணிக் குரல் சேர்ப்புப் பணியை முடித்து விட்டு கமல், அடுத்து இந்தியில் சயீப் அலிகானுடன் சேர்ந்து நடிக்கவிருக்கும் ‘அமர் ஹை’ என்ற பட வேலைகளைத் தொடங்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும், மெளலி படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.