Home Featured நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு சமாளித்திட முடியும்: நஜிப்

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு சமாளித்திட முடியும்: நஜிப்

558
0
SHARE
Ad

புத்ராஜெயா- அரசு மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, தற்போது நிலவி வரும் உலகப் பொருளாதார நெருக்கடியை மலேசியாவால் சமாளித்திட இயலும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.

najibகடந்த 2010ஆம் ஆண்டு பொருளாதார உருமாற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது முதல், நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது ஒவ்வொரு ஆண்டு குறைந்து கொண்டே வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தத் திட்டம் இப்போதுதான் செயல்படுத்தப்பட்டிருந்தது என்றால், நிலைமை மேலும் மோசமாக இருந்திருக்கும் என்றார்.

“கடந்த 1997ஆம் ஆண்டு ஆசியாவில் நிலவிய நிதி நெருக்கடியுடன் ஒப்பிடும்போது, நாடு தற்போது அதிக நிலைத்தன்மையுடன் உள்ளது. ஏனெனில் நாம் அப்போது உரியவற்றைக் கற்றுக் கொண்டோம். பொருளாதார உருமாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, நிதிப் பற்றாக்குறை 6.7 விழுக்காடாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. இந்தாண்டு நிதிப் பற்றாக்குறை என்பது 3.2 விழுக்காடாக இருக்கக்கூடும்.” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள கடந்த காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொருளாதார உருமாற்றுத் திட்டம்தான் உதவிகரமாக இருந்தது என்பதை மக்கள் நிச்சயம் ஒருநாள் உணர்ந்து கொள்வர். பெட்ரோலுக்கான மானியத்தை அகற்றியிருக்காவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் 20 பில்லியன் ரிங்கிட் தொகையை அரசு செலவிட்டிருக்கும். இது மிகப்பெரிய சுமையாக மாறியிருக்கும். ஜிஎஸ்டி மக்களுக்கு கூடுதல் வருவாயைக் கொடுத்துள்ளது. அதை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளேன். அடுத்த பட்ஜெட் அறிக்கையில் அது நிகழும்,” என்று பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நலிந்து வரும் நாட்டின் பொருளாதாரம், ரிங்கிட் மதிப்பின் கடுமையான வீழ்ச்சி,  1 எம்டிபி விவகாரம், நஜிப் தலைமைத்துவத்தின் நேர்மையற்ற தன்மை போன்ற காரணங்களால் பல்முனைகளிலும் நஜிப் மீதான கண்டனங்கள் பெருகி வருகின்றன.

இந்த வார இறுதியில் நஜிப்புக்கு எதிராக உலகளாவிய அளவில் பெர்சே மக்கள் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோகூர் சுல்தானும் மக்களை முட்டாள்களாக்க வேண்டாம் எனக் கடுமையாக கூறியுள்ளார்.