Home இந்தியா அன்னிய செலாவணியை பயன்படுத்த தயங்கமாட்டோம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

அன்னிய செலாவணியை பயன்படுத்த தயங்கமாட்டோம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

528
0
SHARE
Ad

Raghuram-Rajan1புது டெல்லி – சீனாவின் பொருளாதார பாதிப்பு, உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 66.65–ஆக சரிந்துள்ளது. மேலும், தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவிடம் இறுதியாக மேற்கொண்ட கணக்கீட்டின் படி, 355 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது. ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் வகையில், மிகச் சரியான தருணத்தில் அந்த கையிருப்பை பயன்படுத்த நாங்கள் தயங்கமாட்டோம்.”

“எனினும், முடிந்த அளவு வட்டி விகிதங்களை குறைத்து பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.