புது டெல்லி – இந்தியாவில் மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடி என அறியப்படுகிறது. அதில் 96.63 கோடி பேர் இந்துக்களும் (79.8 சதவீதம் ), 17.72 கோடி பேர் இஸ்லாமியர்களும் (14.2 சதவீதம்) உள்ளனர்.
மற்ற மதத்தவர்களான கிறிஸ்தவர்கள் 2.78 கோடி பேரும் (2.3%) , சீக்கியர்கள் 2.08 கோடி பேரும் (1.7 சதவீதம்), புத்த மற்றும் ஜெயின் மதத்தினர் முறையே 0.8 சதவீதமும், 0.4 சதவீதமும் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விபரங்கள்படி முந்தைய கணக்கெடுப்பை ஒப்பிடுகையில், இந்துக்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.