Home வணிகம்/தொழில் நுட்பம் கருத்துக் கணிப்புகளின் எதிரொலி – இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன

கருத்துக் கணிப்புகளின் எதிரொலி – இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன

765
0
SHARE
Ad

மும்பை – மே 23-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தியத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் கணிசமாக உயர்ந்தன.

தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. கடந்த வார இறுதியில் ஓர் அமெரிக்க டாலருக்கு 70.23 ரூபாயாக இருந்த இந்திய நாணயத்தின் மதிப்பு இன்று 69.44 ரூபாயாக உயர்வு கண்டது.