Home இந்தியா அமித் ஷா -உள்துறை; நிர்மலா சீதாராமன் – நிதித் துறை; ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை;...

அமித் ஷா -உள்துறை; நிர்மலா சீதாராமன் – நிதித் துறை; ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை; ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத் துறை!

955
0
SHARE
Ad

புது டில்லி:(மலேசிய நேரம் மாலை 04.10 மணி நிலவரம்)இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டது. நேற்று பதவியேற்றுக் கொண்ட 57 அமைச்சர்களுக்கும் எந்த துறை ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்று வெள்ளிக்கிழமை இரவுக்குள் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த முறை 25 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். பாஜகவின் வரலாற்று வெற்றிக்குக் காரணமாக இருந்த கட்சியின் தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் மத்திய நிதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வேளையில், வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளரான ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், அமேதியில் அதிக பெரும்பான்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

(மேலும் விவரங்கள் தொடரும்)