Home வணிகம்/தொழில் நுட்பம் கடந்த 3 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி

கடந்த 3 மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு படுவீழ்ச்சி

841
0
SHARE
Ad

புதுடில்லி – ஒரு காலகட்டத்தில் ஆசியா கண்டத்தின் மதிப்பு மிக்க நாணயங்களில் ஒன்றாக இருந்த இந்திய ரூபாய், கடந்த 3 மாதங்களில் படுவீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் ஏற்படுத்தியிருக்கும் நிலைத்தன்மையற்ற அரசியல், காஷ்மீரில் தொடர்ந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகிய காரணங்களால் இந்திய ரூபாய் மீதான நம்பிக்கையும், மதிப்பும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

கடந்த டிசம்பர் முதற்கொண்டு தனது மதிப்பில் 2.4 விழுக்காடு குறைந்திருக்கும் இந்திய ரூபாய், இன்று திங்கட்கிழமை நிலவரப்படி ஓர் அமெரிக்க டாலருக்கு 71.515 ரூபாய் என்ற மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் ஜனவரி தொடக்கத்தில் ஓர் அமெரிக்க டாலருக்கு 69.23 ரூபாய் என்ற அளவில் இந்திய ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும் அமெரிக்கா – சீனா இடையிலான வணிகப் பேச்சுவார்த்தைகள் காரணமாக மற்ற ஆசிய நாடுகளின் நாணயங்களின் மதிப்பு வலுவாக இருந்து வருகின்றன.

காஷ்மீர் பிரச்சனை மேலும் மோசமானால் ஓர் அமெரிக்க டாலருக்கு 73 ரூபாய் என்ற பரிவர்த்தனை நிலையை இந்திய ரூபாய் சந்திக்கலாம் என நாணய மதிப்பீட்டாளர்கள் ஆரூடம் தெரிவித்துள்ளனர்.