Home உலகம் பில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்

பில் கேட்சைக் கவர்ந்த ‘1எம்டிபி ஊழல்’ புத்தகம்

956
0
SHARE
Ad

வாஷிங்டன் – மலேசியாவின் 1எம்டிபி ஊழல் விவகாரம் இன்று உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விவகாரமாகி விட்டது. இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையாளர்கள் பிராட்லி ஹோப் மற்றும் டோம் ரைட் ஆகிய இருவரும் எழுதிய ‘தெ பில்லியன் டாலர் வேஹ்ல்’ (The Billion Dollar Whale) என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு உலகின் முதல்நிலை பணக்காரராகக் கருதப்படும் பில் கேட்ஸ் அளித்த பேட்டியில் பிரபல பத்திரிக்கையாளர் பாரிட் சக்காரியா, “தற்போதைக்கு உங்களைக் கவர்ந்த புத்தகம் எது?” என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பில் கேட்ஸ் “பில்லியன் டாலர் வேஹ்ல் புத்தகம்தான் என்னை ஈர்த்தது. அனைத்துலக நிதித் துறை தொடர்பில் அது ஒரு சோகமான ஊழல் என்றாலும், பரபரப்பாகவும், ஈர்க்கும் விதத்திலும் இருந்தது. அனைத்துலக நிதித் துறை தொடர்பிலான முக்கிய புத்தகம் அது” எனக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பில் கேட்ஸ் தினமும் தவறாது புத்தகங்கள் படிப்பவர் என்பது அவரைப் பின்தொடர்பவர்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான அவரையும் ஈர்த்துள்ள 1எம்டிபி ஊழல் குறித்த இந்தப் புத்தகம் அந்த ஊழலின் பின்னணியையும், சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ லோ இந்த ஊழலில் கொண்டிருக்கும் பங்களிப்பு குறித்தும் விரிவாக விவரிக்கின்றது.