Home Featured நாடு நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – கிட் சியாங் வலியுறுத்து

நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – கிட் சியாங் வலியுறுத்து

481
0
SHARE
Ad

Lim-Kit-Siang1ஜோர்ஜ்டவுன்- நாடாளுமன்றத்தின் அவசரகால கூட்டத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் கூட்ட வேண்டும் என ஜஜெக ஆலோசகர் லிம்கிட் சியாங் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி, பங்குச்சந்தை மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றின் நிலை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

“1எம்டிபி குறித்த விசாரணையில் மேலும் காலதாமதம் ஏற்படாமல் இருக்க பொது கணக்கு குழுவில் உள்ள காலியிடங்களை நிரப்புவதை உறுதி செய்யவும் நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். நாட்டிற்கு புதிய பிரதமர் தேவையா அல்லது புதிய அரசாங்கம் தேவையா? என்பதையும் இந்த அவசரக் கூட்டம் தீர்மானிக்கும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய கிட் சியாங் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாடு தற்போது இருவிதமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் 14ஆவது பொதுத் தேர்தல் வரை பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டுமா? அல்லது அவராக பதவி விலகும் வரை காத்திருக்க வேண்டுமா? என்பது அவற்றுள் முதலாவது கேள்வியாகும்.”

“நஜிப்புக்கு எதிரான நம்பிக்கை இல்லா நடவடிக்கையை மேற்கொள்வதில், அதற்கென ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதா? அல்லது எம்.பி.க்களின் சத்திய பிரமாணத்தின் அடிப்படையில் மேற்கொள்வதா என்பது இரண்டாவது கேள்வியாகும்.இதன் பின்னர் தற்காலிக காபந்து நிர்வாகம் அமைக்கப்பட்டு, அடுத்த பொதுத்தேர்தல் வரை அது நாட்டை வழிநடத்திச் செல்லும்,” என்றார் லிம் கிட் சியாங்.