கோலாலம்பூர் – வாட்சாப் தங்களது அண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் செயலிகளில் இன்று முதல் சில புதிய அம்ச மேம்பாடுகளை புகுத்தியுள்ளது.
அதில் ஒன்று, எமோஜி (emoji) என்று சொல்லப்படும் சைகைகளில் நிற வேறுபாடுகளைக் காட்டியுள்ளது.
நிற வேறுபாடுகள் என்றால் நீலம், பச்சை அப்படி அல்ல.
மனிதனின் நிறத்திற்குத் தகுந்தவாறு வேறுபாடுகளைக் காட்டும் சைகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக கருப்பு நிறம், வெள்ளை நிறம், மஞ்சள் நிறம்.
இந்தப் புதிய அம்சத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைக்குமா அல்லது கண்டனங்கள் எழுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.