Home இந்தியா குஜராத்தில் பயங்கரக் கலவரம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

குஜராத்தில் பயங்கரக் கலவரம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

593
0
SHARE
Ad

26-1440531676-hardik-patelnewwwwஅகமதாபாத்-  குஜராத்தில் பயங்கரக் கலவரம் வெடித்துள்ளதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய படேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் படேல் கைது செய்யப்பட்டதால், குஜராத்தில் தீவைப்பு, கற்கள் வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

குஜராத்தில் 12 சத்வீதம் படேல் சமூகத்தினர் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசாங்கத்தில் போதிய வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் சரியான இட ஒதுக்கீடு தரப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஆகையால், தங்களது இனத்தை ஓபிசி-யில் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரிவில்) சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று படேல் சமூகத்தினர் ஹர்தீக் படேல் என்ற 22 வயது இளைஞரின் தலைமையின் கீழ் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்காகப் படேல் இனத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூடி நேற்று அகமதாபாத்தில் மாபெரும் மாநாடு மற்றும் பேரணி நடத்தினர். அப்பேரணியில் 48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஹர்தீக் படேல் அறிவித்தார்.

இதற்குக் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்து அவரைக் கைது செய்தனர். அவரது கைதிற்குக் எதிர்ப்புத் தெரிவித்த கூட்டத்தினரைக் காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

அகமதாபாத்தில் பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் மீது கற்களை வீசீத் தாக்குதலும் நடத்தப்பட்டது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜனி படேல் வீட்டைப் போராட்டக்காரர்கள் தாக்கியதுடன் தீ வைத்தனர்.

எனவே, அகமதாபாத், சூரத்தில்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் படேலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். எ னினும், தொடர்ந்து கலவரம் பரவி வருகிறது.

இதனையடுத்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் ஆனந்திபென் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.