Home Featured நாடு கைரியின் துணிச்சலான பேச்சுக்கு மொகிதீன் பாராட்டு!

கைரியின் துணிச்சலான பேச்சுக்கு மொகிதீன் பாராட்டு!

540
0
SHARE
Ad

Muhyiddin-Yassin-2கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் குறித்தும், 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்தும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் துணிச்சலாகப் பேசியிருப்பதை முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பாராட்டியுள்ளார்.

இது குறித்து மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு பிரச்சனைகளில் அவரது (கைரி) துணிச்சலான நிலைப்பாட்டிற்கு எனது மரியாதையையும், பாராட்டுகளையும் தெரிவிக்கின்றேன். அது இஸ்லாம் கற்றுக்கொடுத்த உண்மைகள் மற்றும் கொள்கைளை அடிப்படையாகக் கொண்டது என நம்புகின்றேன்.”

“மலேசியாவை சரியான பாதையில் செலுத்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவராக அவர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கு நான் எனது ஆதரவைத் தெரிவிப்பதோடு, இந்தப் பிரச்சனைகளில் நாம் துணிச்சலாகவும், வெளிப்படையான முறையிலும் கையாளப்படவில்லை என்றால், தோல்வியடைந்த நாடு என்றே நிலைக்கு நாம் தள்ளப்படக்கூடும் என்பதை நினைவுறுத்துகின்றேன்” என்று மொகிதீன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கொந்தளிப்பான நிலையில் இருக்கும் உலகப் பொருளாதாரம், ரிங்கிட் மதிப்பின் தொடர் வீழ்ச்சி, அரசியல் குழப்பங்கள், அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகள், வெளிநாட்டினரின் வரவு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களின் தயக்கம் ஆகியவை மலேசியா ஒரு தோல்வியடைந்த நாடாக மாறும் அபாயக்கட்டத்தில் இருப்பதற்கான காரணங்கள் என்றும் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.